
உத்தமபாளையம் : உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மெகா லோக் அதாலத் நடந்தது.
இந்த நிகழ்விற்கு உத்தமபாளையம் தாலுகா ஒருங்கிணைந்த குழுவின் தலைவர் சிவாஜி செல்லையா தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜசேகர், உத்தமபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமனாதன் முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் பாலமுருகன், அழகுமலை, பொன்ராம் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் மோட்டார் வாகன விபத்து நஸ்ட ஈடு கோரும் வழக்குகளில் ரூ.1 கோடியே 92 லட்சத்து 97 ஆயிரம் தீர்வு தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டது. அசல் வழக்குகளில் 11 வழக்குகள் முடிக்கப்பட்டு அதற்குண்டான ரூ.15 லட்சத்து 80 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டது. மேல் முறையீட்டு வழக்குகளில் 6 வழக்குகள் முடிக்கப்பட்டு அதற்கான தொகை ரூ.2 லட்சத்து 60 ஆயிரம், 'செக்' மோசடி வழக்குகளில் தீர்வான தொகை ரூ. 19 லட்சத்து 14 ஆயிரம், பிணை கைதிகள் தங்களின் குற்றங்களை ஒப்புக் கொண்டு அபராத தொகை ரூ. 21 லட்சத்து 46 ஆயிரத்து 100, வங்கிகள் வராக்கடனை வசூல் செய்த வகையில் வசூலான தொகை ரூ.15 லட்சத்து 62 ஆயிரம் என அனைத்து வழக்குகளுக்கும் உத்தரவு வழங்கப்பட்டன.