sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வளர்ச்சிப்பணிகளை நோக்கி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி

/

வளர்ச்சிப்பணிகளை நோக்கி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி

வளர்ச்சிப்பணிகளை நோக்கி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி

வளர்ச்சிப்பணிகளை நோக்கி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி


ADDED : அக் 01, 2025 10:19 AM

Google News

ADDED : அக் 01, 2025 10:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி தலைவர் கா.கண்ணன் காளிராமசாமி, செயல் அலுவலர் க.சிவக்குமார் கூறியதாவது:

மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் சப்ளை சீராக கிடைக்கும் வகையில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1687 லட்சம் செலவில் புதிய பைப் லைன் அமைத்து குடிநீர் வசதி, பூங்கா அமைக்கப்பட்டு உள்ளன. கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.593 லட்சம் செலவில் ஊரணி மேம்படுத்துதல், திருப்பதி நகரில் பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது.

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.231 லட்சம் செலவில் 4, 5 , 6 வது வார்டுகளில் சாக்கடையுடன் கூடிய தார்ரோடு. 15வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.391 லட்சம் செலவில் சாக்கடை, குடிநீர் வசதி, மயான மேம்பாடு பணிகள் நடந்துள்ளன. பள்ளி மேம்பாடு 6 வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.38.40 லட்சம் செலவில் குடிநீர், சுகாதார வளாகம் கட்டும் பணி நடந்து வருகிறது.

நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.128 லட்சம் செலவில் சங்கரப்பன் கண்மாய் கரையை ஒட்டி தார் ரோடு பணி நடந்து வருகிறது. அடிப்படை கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் செலவில் மங்களக் கோம்பை - கூவலிங்க ஆற்றை கடக்கும் வகையில் பாலம் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.168 லட்சம் செலவில் அனைத்து தெருக்களிலும் பாதாள சாக்கடையுடன் வீட்டிற்கான பைப் இணைக்கும் பணி நடந்து வருகிறது. சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.24 லட்சம் செலவில் 15வது வார்டில் தார் ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது. அயோத்தி தாஸ் பண்டிதர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.19 லட்சம் செலவில் ரங்கநாதபுரம் 7 வது வார்டில் நாடக மேடை, பேவர் பிளாக் ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது.

நூலக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.44 லட்சம் செலவில் பி.தர்மத்துப்பட்டி,

மேலச்சொக்கநாதபுரத்தில் நூலகம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது என தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us