/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மரம் மீது முளைத்த ஏலச்செடி ஆச்சரியமாக பார்க்கும் மக்கள்
/
மரம் மீது முளைத்த ஏலச்செடி ஆச்சரியமாக பார்க்கும் மக்கள்
மரம் மீது முளைத்த ஏலச்செடி ஆச்சரியமாக பார்க்கும் மக்கள்
மரம் மீது முளைத்த ஏலச்செடி ஆச்சரியமாக பார்க்கும் மக்கள்
ADDED : அக் 01, 2025 10:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு,: மூணாறு அருகே ஆனச்சால், அம்பலச்சால் பகுதியை சேர்ந்தவர் ரோய்.
இவருக்கு மாங்காய்பாறை பகுதியில் விளை நிலம் உள்ளது. அதில் மரம் ஒன்றின் மீது 50 அடி உயரத்தில் ஏலச்செடி வளர்ந்து வருகிறது. ஒன்றரை ஆண்டு வளர்ச்சியுள்ள ஏலச்செடியின் விதைகளை பறவைகள் அல்லது வேறு ஏதேனும் உயிரினங்கள் கொண்டு சென்று போட்டதால் ஏலச் செடி வளர்ந்ததாக ரோய் தெரிவித்தார். விளை நிலத்தில் உள்ள ஏலச் செடிகளுக்கு மருந்து தெளிக்கும் போது மரத்தின் மீதுள்ள ஏலச்செடிக்கும் மருந்து தெளிக்கப்படுகிறது. அதனால் நன்கு வளர்ந்துள்ள ஏலச்செடியை பொதுமக்கள் அதிசயத்துடன் பார்த்து வருகின்றனர்.