ADDED : டிச 09, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: சீர்மரபினர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை நடக்க உள்ளது. இதற்காக டிச.13ல் போடி பாலார்பட்டி பென்னிகுவிக் கலையரங்கம், டிச.20ல் பெரியகுளம் எண்டபுளி புதுப்பட்டி சமுதாயகூடம், டிச.27ல் ஆண்டிபட்டி தாலுகா மயிலாடும்பாறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.
நலவாரியத்தில் சீரமரபினர் இனத்தை சேர்ந்த 18 வயது முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம். இந்த வாரியத்தின் மூலம் கல்வி, திருமணம், மகப்பேறு, முதியோர் உதவித்தொகை பெறலாம். மேலும் சில நலத்திட்டங்களில் பயன் பெறலாம். விண்ணப்பித்து பயன் பெறுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.