ADDED : ஜன 03, 2024 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி மாவட்ட மருத்துவ சமுதாய சங்கம், சின்னமனுார் சங்கம் இணைந்து சின்னமனுாரில் உள்ள தியாகி விஸ்வநாததாஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் சங்க மாவட்ட தலைவர் கணேசன், செயலாளர் தனராஜ், பிச்சையா நிர்வாகிகள் பங்கேற்றனர். விஸ்வநாததாஸ் பிறந்தநாள், நினைவு தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும், முடித்திருத்தும், சவரதொழிலாளர்கள் நலவாரியத்தைமீண்டும் செயல்படுத்த வேண்டும். இச்சமுதாயத்திற்கு உள் ஒதுக்கீடு, வன்கொடுமை தடுப்பு சட்டம் வழங்கிட வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றனர்.