/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காப்பகத்தில் வெளியேறிய மனநலம் பாதித்த சிறுவன்
/
காப்பகத்தில் வெளியேறிய மனநலம் பாதித்த சிறுவன்
ADDED : ஜன 01, 2025 06:52 AM
தேனி : கோடாங்கிபட்டி மனிதநேய காப்பகத்தின் பொறுப்பாளர் பிரியங்கா 33.
டிச.5ல் குழந்தைகள் நல பாதுகாப்பு அழகு மூலம் மனநலம் பாதித்த 14 வயது சிறுவனை காப்பகத்தில் விட்டுச் சென்றனர். பின் டிச.12ல் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பரிசோதனையில் சிறுவனுக்கு 75 சதவீத மனநிலை பாதிப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த விபரங்களை குழந்தைகள் நல கமிட்டியிடம் காப்பகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பின் டிச.25ல் மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவன் காப்பகத்தில் இருந்து வெளியே சென்று விட்டதாகவும், அக்கம், பக்கம் அருகில் உள்ள பகுதிகளில் தேடியும் கிடைக்காததால் சிறுவனை கண்டுபிடித்துத் தர டிச.30ல் பொறுப்பாளர் பழனிச்செட்டிபட்டியில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

