/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மனநலம் பாதித்த பெண் சிகிச்சைக்கு பின் குடும்பத்தினருடன் சேர்ப்பு
/
மனநலம் பாதித்த பெண் சிகிச்சைக்கு பின் குடும்பத்தினருடன் சேர்ப்பு
மனநலம் பாதித்த பெண் சிகிச்சைக்கு பின் குடும்பத்தினருடன் சேர்ப்பு
மனநலம் பாதித்த பெண் சிகிச்சைக்கு பின் குடும்பத்தினருடன் சேர்ப்பு
ADDED : பிப் 01, 2025 05:35 AM
தேனி: போடி அருகே மேலப்பரவு பகுதியில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் மூணார் செல்லும் ரோட்டில் ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதித்த பெண் ஒருவர் சுற்றித்திரிந்தார்.
போலீசார் மூலம் தகவல் அறிந்த எம்.சுப்புலாபுரம் மருந்தாளுனர் ரஞ்சித்குமார் அப்பெண்ணை மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனை மனநல நலவாழ்வு சிகிச்சை மையத்தில் சேர்த்தனர். அங்கு மனநல மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ், நர்ஸ்களின் தொடர் பராமரிப்பில் அப்பெண் குணமடைந்தார். விசாரணையில் மேலப்பரவு பகுதியை சேர்ந்த அன்னகாமு - பாப்பாதம்பதியின் மகள் வேல்மணி என தெரிந்தது. ஏட்டு சுப்புலட்சுமி உதவியுடன்,மருந்தாளுனர் மலைவாழ் பெண் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். கிராம மக்கள்,மருந்தாளுனர், போலீசாரை பாராட்டினர்.