ADDED : நவ 15, 2024 05:20 AM
பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்
தேனி: சமூக முன்னேற்றத்திற்காக பாடுபட்டு சாதனை புரிந்த 13 வயதிற்கு மேல் 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் ஜன.24ல் மாநில அரசு விருது வழங்குகிறது. சாதனை புரிந்த பெண் குழந்தைகள் https://theni.nic.in என்ற முகவரியில் டிச.,25க்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
பொருளில்லா ரேஷன் கார்டாக மாற்றிக் கொள்ளலாம்
தேனி: ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற விரும்பமில்லை எனில், உரிமையை விட்டு கொடுப்பது தொடர்பாக www.tnpds.gov.in என்ற உணவுப் பொருள் வழங்கல் துறையின் இணைய தளத்தின் மூலம் ரேஷன் கார்டினை பொருளில்லா ரேஷன் கார்டாக மாற்றிக் கொள்ளலாம் என, கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
பயனாளிகளுக்கு குடியிருப்பு ஆணைகள் வழங்கல்
தேனி: போடி தாலுகா போ.மீனாட்சி புரத்தில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. கொழுக்குமலையில் வசிக்கும் 14 பயனாளிகளுக்கு இந்த அடுக்கு மாடி குடியிருப்பில், குடியிருப்பு ஆணைகளை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார். டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.