/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கேரளாவில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
/
கேரளாவில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கேரளாவில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கேரளாவில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
ADDED : ஏப் 18, 2025 06:47 AM
மூணாறு,: கேரளாவில் வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்த வானிலை ஆய்வு மையம் நேற்று எட்டு மாவட்டங்களுக்கு ' எல்லோ அலர்ட்' முன்னெச்சரிக்கை விடுத்தது.
கேரளாவில் கோடை காலம் துவங்கிய நிலையில் கடந்த வாரம் மாநிலத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. அதனால் வெப்பம் சற்று தணிந்த நிலையில் தற்போது வெப்பம் மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கொல்லம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்பதால், அந்த மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் ' எல்லோ அலர்ட்' முன்னெச்சரிக்கை விடுத்தது. அதே மாவட்டங்களுக்கு நேற்று எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பாலக்காடு மாவட்டத்தில் 37 டிகிரி, எஞ்சிய மாவட்டங்களில் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் காலை 11:00 முதல் மதியம் 3:00 மணி வரை பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்த்து பாதுகாப்புடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.