/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் கொடியேற்று விழா ஓ.பி.எஸ்., பழனிசாமி அணியினர் மோதல்
/
எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் கொடியேற்று விழா ஓ.பி.எஸ்., பழனிசாமி அணியினர் மோதல்
எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் கொடியேற்று விழா ஓ.பி.எஸ்., பழனிசாமி அணியினர் மோதல்
எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் கொடியேற்று விழா ஓ.பி.எஸ்., பழனிசாமி அணியினர் மோதல்
ADDED : ஜன 18, 2024 02:34 AM
பெரியகுளம்:தேனி மாவட்டம் பெரியகுளத்தில் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா கொடி ஏற்றுவதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கும், அ.தி.மு.க., வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பெரியகுளத்தில் எம்.ஜி.ஆர் 107 வது பிறந்தநாள் விழாவையொட்டி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு நகர செயலாளர் அப்துல்சமது தலைமையில், அமைப்பு செயலாளர் மஞ்சுளா, மாவட்ட பிரதிநிதி அன்பு, தொகுதி துணை அமைப்பாளர் ரெங்கராஜ் ஆகியோர் டூவீலர்களில் வந்து பழைய பஸ்ஸ்டாண்டில் உள்ள அண்ணாத்துரை சிலை அருகே இருந்த கம்பத்தில் கொடியேற்றினர்.
அ.தி.மு.க., நகர செயலாளர் பழனியப்பன் தலைமையில் கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர், முன்னாள் எம்.பி., பார்த்திபன், முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், கிருஷ்ணக்குமார், ஒன்றிய செயலாளர் ராஜகுரு ஆகியோர் ,'நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் அ.தி.மு.க., கொடியினை நீங்கள் எப்படி ஏற்றலாம்', என கேட்டு வாக்குவாதம் செய்தனர். அதற்கு பன்னீர் செல்வம் தரப்பினர்,' ஓ.பன்னீர் செல்வம் சார்பில் அமைக்கப்பட்ட கொடிகம்பத்தில் நாங்கள் தான் ஏற்றுவோம் என கூறியதால் இருதரப்பினருக்குமிடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. வடகரை போலீசார் இருதரப்பினரையும் விலக்கிவிட்டனர்.
இதன்பின் பன்னீர்செல்வம் தரப்பு ஏற்றிய கொடியினை இறக்கிவிட்டு, அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர் கொடியேற்றினார். அப்போதும் ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு மோதலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது.