ADDED : ஜன 18, 2024 06:09 AM

தேனி : தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா மாவட்டம் முழுவதிலும் கட்சியினர், பொதுமக்கள் அவரது உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேனி நேருசிலை அருகே அ.தி.மு.க., சார்பில் நகரச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கட்சி நிர்வாகிகள் எம்.ஜி.ஆர்., உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர் சுந்தரபாண்டியன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் தனலட்சுமி, எம்.ஜி.ஆர்., மன்ற மாநில இணைச்செயலாளர் பார்த்தீபன், மாவட்ட செயலாளர் முத்துக்கிருஷ்ணன் பங்கேற்றனர்.
பன்னீர் செல்வம் அணியினர் சார்பில் அல்லிநகரம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு தேனி வடக்கு நகர செயலாளர் ரெங்கநாதன் தலைமையில் அணியினர் மரியாதை செலுத்தினர். துணைச்செயலாளர் மயில்வேல், அவைத்தலைவர் குருசாமி, பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
போடி: அ.தி.மு.க., சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் ஜக்கையன் தலைமையில் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். போடி வடக்கு நகர செயலாளர் சேதுராம், தெற்கு நகர செயலாளர் மாரியப்பன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சாலிமரத்துப் பட்டியில் அ.தி.மு.க., அமைப்பு சாரா அணியின் தேனி மேற்கு மாவட்ட செயலாளர் குறிஞ்சி மணி தலைமையில் எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. முன்னாள் அவைத் தலைவர் முத்துராஜ், அவைத் தலைவர் ஆண்டி, துணை செயலாளர் ராஜா, பொருளாளர் தினேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போடியில் ஓ.பி.எஸ்., அணி சார்பில் நகர செயலாளர் பழனிராஜ் தலைமையில் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர். தொகுதி செயலாளர் ஜெயராம் பாண்டியன், மேற்கு ஒன்றிய செயலாளர் குருமணி, போடி நகர அவைத் தலைவர் மணிகண்டன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அரண்மனை சுப்பு, மத்திய ஒன்றிய செயலாளர் சுந்தரராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆண்டிபட்டி: அ.தி.மு.க.,மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., தவசி ஆகியோர் முன்னிலையில் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர் அமரேசன், நகர் செயலாளர் அருண்மதி கணேசன், பொதுக்குழு உறுப்பினர் பாலு, ஒன்றிய பொருளாளர்கள் செல்வம், லோகநாதன், மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கவிராஜன், வீரகுமார், சாம்சன், முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பன்னீர்செல்வம் அணி சார்பில் மேற்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா, கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகராஜன் நகர் செயலாளர் ராஜா, தொகுதி செயலாளர் பழனி உட்பட ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.