/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மொச்சைக்கு நுண்ணுாட்ட உரம் 50 சதவீத மானியத்தில் தயார்
/
மொச்சைக்கு நுண்ணுாட்ட உரம் 50 சதவீத மானியத்தில் தயார்
மொச்சைக்கு நுண்ணுாட்ட உரம் 50 சதவீத மானியத்தில் தயார்
மொச்சைக்கு நுண்ணுாட்ட உரம் 50 சதவீத மானியத்தில் தயார்
ADDED : ஜூன் 20, 2025 03:43 AM
கம்பம்: கம்பம் பள்ளத்தாக்கில் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மொச்சை பயிருக்கு தேவையான நுண்ணூட்ட சத்து உரம் 50 சதவீத மானியத்தில் விற்பனைக்கு தயாராக இருப்பதாக வேளாண் துறை அறிவித்துள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்களில் மொச்சை, எள்ளு, மக்காச் சோளம், அவரை, தட்டை, சோளம், கம்பு உள்ளிட்ட சிறுதானியங்களும், பயறு வகைகளும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கம்பம் மணி கட்டி ஆலமரம், கம்பமெட்டு ரோடு, புதுக்குளம் ரோடு, ஏக லூத்து ரோடு உள்ளிட்ட இடங்களில் மொச்சை பயிரில் பூ பூத்து குலுங்குகிறது.
மொச்சை பயறுக்கு நுண்ணுாட்ட சத்துக்கள் தேவையாகும். உரம் கம்பம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருப்பு உள்ளது. ஒரு விவசாயிக்கு இரண்டு கிலோ வீதம் வழங்கப்படும் என்று வேளாண் துணை அலுவலர் குணசேகர் தெரிவித்துள்ளார்.