/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரூ.1.37 கோடி மோசடி வழக்கில் போலீசில் சிக்கிய இடைத்தரகர்
/
ரூ.1.37 கோடி மோசடி வழக்கில் போலீசில் சிக்கிய இடைத்தரகர்
ரூ.1.37 கோடி மோசடி வழக்கில் போலீசில் சிக்கிய இடைத்தரகர்
ரூ.1.37 கோடி மோசடி வழக்கில் போலீசில் சிக்கிய இடைத்தரகர்
ADDED : பிப் 06, 2025 02:22 AM

தேனி:தேனி மாவட்டத்தில், 21 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 1.37 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், இடைத்தரகரை, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி கொத்தப்பட்டியைச் சேர்ந்தவர் பிரகாஷ், 42. இவருக்கு கொடுவிலார்பட்டியைச் சேர்ந்த மகாலட்சுமி, பாலமுருகன், நாகேந்திரகுமார் அறிமுகம் ஆகினர். பணம் வழங்கினால் அரசு வேலை வாங்கித் தருவதாக அவர்கள் கூறினர்.
இதை நம்பி பிரகாஷ், இவரது உறவினர்கள் ஏழு பேர், 2020ல், 48 லட்சம் ரூபாய் வழங்கினார். இதற்காக இவர்களுக்கு போலி ஆணைகளை மூவரும் வழங்கினர். இவர்கள் மூவரும் இணைந்து, மாவட்டத்தில், 21 பேரிடம், 1.37 கோடி ரூபாய் மோசடி செய்தனர். பாதிக்கப்பட்டவர்கள் தேனி எஸ்.பி.,யிடம் புகார் அளித்தனர்.
மூவரையும், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், நவம்பரில் கைது செய்தனர். விசாரணையில் பழனிசெட்டிப்பட்டி கண்ணன், 52, என்பவர் இடைத்தரகராக செயல்பட்டது தெரிந்தது. போலீசார் கண்ணனை நேற்று கைது செய்தனர்.