/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மதுரை ஆவினுடன் தேனி ஒன்றியத்தை இணைக்க கோரிக்கை பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

ADDED : டிச 18, 2025 05:57 AM
தேனி: தேனி மாவட்ட ஆவினில் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க மதுரை ஆவினுடன் மீண்டும் இணைக்க வேண்டும். இக் கோரிக்கை வலியுறுத்தி தேனி ஆவின் முன் டிச.30 பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இம்மாவட்டத்தில் ஆவின் நிர்வாகத்தின் கீழ் 380 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் இயங்குகின்றன. இதில் 12 ஆயிரம் பேர் உற்பத்தியாளர்களாக உள்ளனர்.
நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்து, ஆவினுக்கு வழங்கப்பட்டது. 2020 முதல் உற்பத்தி குறைந்து 44 ஆயிரம் லிட்டர் மட்டுமே கொள்முதல் ஆகிறது. இதில் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.33 முதல் 34 வரை வழங்கப் படுகிறது.
கூடுதல் ஊக்கத் தொகையாக லிட்டருக்கு ரூ.3, உற்பத்தியாளர்களின் வங்கிக்கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகி ராமதாஸ் கூறியதாவது: தேனி ஆவினில் நிர்வாக கோளாறு, பணம் பட்டுவாடாவில் ஏற்பட்ட முறைகேடுகளால் பால் வினியோகம் குறைந்து தனியார் பண்ணைகளுக்கு பால் வழங்குகின்றனர். குறிப்பாக தேனி ஆவின் பிரித்த போது ரூ.12 கோடி இருந்த கையிருப்பு என்ன ஆனது என்பது தெரியவில்லை. மின்கட்டணம் ரூ.3 லட்சம், தேவையற்ற
தொழிலாளர்களின் சம்பளம் ரூ.3 லட்சம் எனமொத்தம் ரூ.6 லடசம் நஷ்டம் மாதந்தோறும் ஏற்படுகிறது. இதனை சீரமைக்க ஒரே வழி, மதுரை ஆவினுடன் தேனி ஒன்றியத்தை மீண்டும் இணைக்க வேண்டும். இதனை வலிறுத்தி கூட்டுறவு சங்க நிர்வாகிகள் டிச.30ல் தேனி ஆவின் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.