ADDED : ஜூலை 17, 2025 03:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்,:தேனிமாவட்டம் கம்பத்தில் நேற்று இரவு பால் வியாபாரி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
கம்பம் ஜல்லிகட்டு தெரு முருகன் மகன் இளம் பரிதி 27. இவருக்கு மனைவி, குழந்தை உள்ளனர். இவரும், தந்தையும் பால் வியாபாரம் செய்தனர். இளம்பரிதி ரேக்ளா ரேஸ் பந்தயங்களில் பங்கேற்பதில் ஆர்வம் கொண்டதால் ஜல்லிகட்டு காளைகள் வளர்த்தார்.
நேற்று இரவு 7:45 மணியளவில் வீட்டில் இருந்து அப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே நடந்து சென்றார். மர்ம நபர்கள் அரிவாளால் கழுத்துப் பகுதியில் இளம்பரிதியை சரமாரியாக வெட்டினர். அதை தடுக்க போனவருக்கும் வெட்டு விழுந்தது. கம்பம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட இளம்பரிதி இறந்தார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.