கனிமங்கள் எடுத்து செல்லும் லாரிகளில் ஜி.பி.எஸ்., கட்டாயம்
கனிமங்கள் எடுத்து செல்லும் லாரிகளில் ஜி.பி.எஸ்., கட்டாயம்
UPDATED : செப் 21, 2026 11:03 PM
ADDED : செப் 21, 2026 08:04 PM
தேனி:கனிமங்கள் எடுத்து செல்லும் லாரிகளில் கட்டாயம் ஜி.பி.எஸ்., கருவி பொருத்த வேண்டும் என கலெக்டர் வைத்திநாதன் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரவில் கனிமங்கள் எடுத்துச்செல்லும் அனைத்து வாகனங்களிலும் ஐ.எஸ்.,140 தரத்திலான ஜி.பி.எஸ்., கருவி பொருத்தி அதனை செப்.,30க்குள் https://mimas.tn.gov.in என்ற இணைதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த விபரத்தை மாவட்ட கனிமவளத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் குவாரி, கிரஷர் உரிமையாளர்கள், வாகன உரிமையாளர்கள் தெரிவிக்க வேண்டும்.ஜி.பி.எஸ்., கருவி பொருத்திய வாகனங்களுக்கு மட்டும் கனிமங்கள் எடுத்து செல்ல நடைசீட்டு, இடைமாற்று சீட்டு வழங்கப்படும். அதே போல் குவாரி, கிரஷர்களில் உள்ள எடைமேடை விபரத்தையும் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் தெ ரிவித்துள்ளார்.
