ADDED : ஜன 29, 2024 06:38 AM

கூடலுார்: பென்னிகுவிக் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கூடலுார் மக்கள் மன்றம் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.
முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் பென்னிகுவிக் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கூடலுார் மக்கள் மன்றம் சார்பில் பெண்கள், ஆண்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடந்தது. உத்தமபாளையம் ஏ.எஸ்.பி. மதுகுமாரி கொடியசைத்து துவக்கி வைத்தார். கூடலுாரில் இருந்து 9 கி.மீ., தூரமுள்ள லோயர்கேம்ப் பென்னிகுயிக் மணிமண்டபம் வரை நடந்த இப் போட்டியில் பெண்கள் அதிக அளவில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சைக்கிள் ஓட்டப் போட்டி நடந்தது. நடுவர்களாக ஆசிரியர்கள் கருத்தப்பாண்டி, கார்த்திக் பாண்டியன், ராஜாராம், கொடியரசன் இருந்தனர். பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டியில் முதலிடம் முத்துலட்சுமி, இரண்டாமிடம் அஸ்வினி, மூன்றாமிடம் லத்திகா பெற்றனர். ஆண்கள் பிரிவு போட்டியில் முதலிடம் ஆனந்த், இரண்டாமிடம் மாரிமுத்து, மூன்றாமிடம் முகமது தாரிக் பெற்றனர். சைக்கிள் போட்டியில் முதலிடம் வல்லரசு, இரண்டாமிடம் ரித்தீஷ், மூன்றாமிடம் அன்புராஜ் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கலந்து கொண்ட வீரர்கள் அனைவருக்கும் பிரண்ட்ஸ் கேபிள் பாண்டியராஜன் நினைவாக 'டீ சர்ட்', சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் புதுராஜா, தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் கஜேந்திரன், கவுரவத் தலைவர் தங்கராஜ், துணைத் தலைவர் லோகேந்திரன், பொருளாளர் திலகர் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.