/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் ஆய்வு
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் ஆய்வு
ADDED : செப் 03, 2025 05:45 AM
ஆண்டிபட்டி : டி.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் திடீர் ஆய்வு செய்தார்.
இளம் வயது பெண்கள் திருமணம் தடுப்பது குறித்து விழிப்புணர்வு முகாமை மேகமலையில் துவக்கி வைக்க ஆண்டிபட்டி வழியாக சென்ற அமைச்சர் சுப்பிரமணியம் டி. சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் சென்று திடீர் ஆய்வு நடத்தினார். அங்கு தேவையான அடிப்படை வசதிகள், டாக்டர்கள், பணியாளர்களின் எண்ணிக்கை சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் குறைகள், கூடுதல் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
ஆண்டிபட்டிவைகை ரோடு சந்திப்பில்எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், ஆண்டிபட்டி தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜாராம், நகர செயலாளர் சரவணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பாண்டியன் உட்பட கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.