/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு மாணவர்கள் விடுதிக்கு கட்டில் வழங்க திட்டம் அமைச்சர் மெய்யநாதன் பேச்சு
/
அரசு மாணவர்கள் விடுதிக்கு கட்டில் வழங்க திட்டம் அமைச்சர் மெய்யநாதன் பேச்சு
அரசு மாணவர்கள் விடுதிக்கு கட்டில் வழங்க திட்டம் அமைச்சர் மெய்யநாதன் பேச்சு
அரசு மாணவர்கள் விடுதிக்கு கட்டில் வழங்க திட்டம் அமைச்சர் மெய்யநாதன் பேச்சு
ADDED : ஜன 23, 2025 01:29 AM
தேனி:அரசு மாணவர்கள் விடுதிகளுக்கு கட்டில் வழங்க திட்டம் தயாரித்துள்ளதாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தேனியில் பேசினார்.
கடந்தாண்டு அரசுப் பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற வைத்த அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது. விழாவில் அமைச்சர் மெய்யநாதன் பேசியது: மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 295 கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், 4 உண்டு உறைவிட பள்ளிகள், 55 மாணவர் விடுதிகள் உள்ளன. இப்பள்ளிகளில் கடந்த அரசுப் பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகம். இதில் பிளஸ் 2 வகுப்பில் 14 பள்ளிகள், பத்தாம் வகுப்பில் 18 பள்ளிகள், இரு வகுப்பிலும் 5 பள்ளிகளில் நுாறு சதவீத தேர்ச்சியை மாணவர்கள் பெற்றுள்ளனர். அரசு விடுதி மாணவர்களுக்கு கட்டில் வழங்க திட்டம் தயாரித்துள்ளோம். செக்கானுாரணி பெண்கள், ஆண்கள் கள்ளர் சீரமைப்பு மேல்நிலைப்பள்ளி, தேனி வெள்ளையம்மாள்புரம் அரசுபள்ளிகளில் ரூ.149 கோடி செலவில் உண்டு உறைவிட பள்ளி அமைக்க நபார்டு ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம் என்றார்.
ஆண்டிபட்டி தி.மு.க., எம்.எல்.ஏ., மகாராஜன் பேசுகையில், 'பள்ளிகளில் வாட்ச்மேன் இல்லை. இரவில் சமூக விரோத செயல்கள், திருட்டு நடக்கிறது. விடுதிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் தலா ஒரு பாய், தலையணை போதுமானதாக இல்லை. ஆசிரியர்கள் மாணவர்களின் செயல்பாடுகள் பற்றி இருமாதங்களுக்கு ஒரு முறை பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.