/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாணவர்கள் பொது அறிவை வளர்த்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் போடி கல்லுாரி விழாவில் அமைச்சர் பொன்முடி பேச்சு
/
மாணவர்கள் பொது அறிவை வளர்த்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் போடி கல்லுாரி விழாவில் அமைச்சர் பொன்முடி பேச்சு
மாணவர்கள் பொது அறிவை வளர்த்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் போடி கல்லுாரி விழாவில் அமைச்சர் பொன்முடி பேச்சு
மாணவர்கள் பொது அறிவை வளர்த்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் போடி கல்லுாரி விழாவில் அமைச்சர் பொன்முடி பேச்சு
ADDED : செப் 26, 2024 05:40 AM

போடி: 'மாணவர்கள் பொது அறிவு வளர்த்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும்', என போடி ஏல விவசாயிகள் சங்க கல்லூரியின் 50 வது பொன்விழா அஞ்சல் அஞ்சல்தலை வெளியீட்டு விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.
இக்கல்லூரியில் நேற்று நடந்த பொன்விழா நுழைவுவாயில் திறப்பு விழா, அஞ்சல்தலை வெளியீட்டு விழா கல்லூரி தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. உப தலைவர் ராமநாதன், செயலாளர் புருஷோத்தமன், எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன், கலெக்டர் ஷஜீவனா, மாவட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் குமரன், கல்லூரி கல்வி இணை இயக்குனர் குணசேகரன், மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் ராமகிருஷ்ணன், எம்.எல்.ஏ., க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் லட்சுமணன் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சிவக்குமார் வரவேற்றார்.
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பொன்விழா நுழைவுவாயிலை திறந்து, அஞ்சல் தலையை வெளியிட்டு பேசியதாவது : தமிழகத்தில் ஏல விவசாயிகள் நடத்தும் ஒரே கல்லூரி இதுதான். பல ஆண்டுகளுக்கு முன் பெண்கள் படிப்பது அரிது. தற்போது பெண்கள் அதிக அளவில் படித்து வருகின்றனர். ஆங்கிலம், தமிழ் என இரு மொழி கொள்கை வேண்டும். பள்ளி கல்லூரிகளின் எண்ணிக்கை மட்டும் உயர்ந்தால் மட்டும் போதாது. கல்வியின் தரத்தையும் உயர்த்த வேண்டும். கல்வி, சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அதைத்தான் முதல்வர் ஸ்டாலின் செயல் படுத்துகிறார்.
விளையாட்டில் தமிழகம் 3வது இடம்
நான் முதல்வன் திட்டத்தில் கல்லூரியில் படிக்கும் போதே தொழில் திறமையை வளர்க்க வழி நடத்திக் கொண்டு இருக்கிறார் அமைச்சர் உதயநிதி. விளையாட்டு வீரர்களில் ஊக்கப்படுத்தும் வகையில் செயல் படுவதால் விளையாட்டு துறையில் இந்தியாவில் தமிழகம் மூன்றாம் இடத்தை பெற்று உள்ளது. மாணவர்கள் புத்தகத்தை மட்டும் படித்தால் போதாது. வரலாற்றை தெரிந்து பொது அறிவு வளர்த்து கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும். என பேசினார்.
விழாவில் கல்லூரி நிர்வாக குழுவினர்கள் கமலநாதன், சொரூபன். சிவப்பிரகாசம், ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், நந்தகுமாரன், ஏல விவசாயிகள் சங்க நிர்வாகி நிர்வாக குழுவினர்கள் ஞானவேல், பிரபு, முருகேசன், ஓம் பிரகாஷ், இமாம்தீன், பிரபாகரன், ஜெகதீஸ்வரன், மாணிக்கவாசகம், செல்வகுமார், நித்தியானந்தன், மகேஸ்வரன், தெய்வசிகாமணி, ரவி, ஜெ.ஜெ., கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர்கள் செல்வின், ரிச்சர்ட், ஜெ.வி. டிரேடர்ஸ் கார்டமம் அன்ட் பெப்பர் மெர்சன்ட் ஜீவானந்தம், கல்லூரி பேராசிரியர் பாலமுருகன், 1982 - -1985ம் ஆண்டு வணிகவியல் துறை மாணவர்கள் செல்வம், ராஜா, அன்பழகன், ராஜேந்திரன், மனோகரன், 1984 -1987 வரலாற்றுத்துறை மாணவர்கள் குமார், ராதாகிருஷ்ணன், சின்னமனூர் தி.மு.க., முன்னாள் ஒன்றிய தலைவர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.