/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
எம்.எல்.ஏ., நில ஆக்கிரமிப்பு தாசில்தார், வி.ஏ.ஓ.,பணி மாற்றம்
/
எம்.எல்.ஏ., நில ஆக்கிரமிப்பு தாசில்தார், வி.ஏ.ஓ.,பணி மாற்றம்
எம்.எல்.ஏ., நில ஆக்கிரமிப்பு தாசில்தார், வி.ஏ.ஓ.,பணி மாற்றம்
எம்.எல்.ஏ., நில ஆக்கிரமிப்பு தாசில்தார், வி.ஏ.ஓ.,பணி மாற்றம்
ADDED : நவ 24, 2024 07:30 AM
மூணாறு : சின்னக்கானல் பகுதியில் மூவாற்றுபுழா எம்.எல்.ஏ. மாத்யூகுழல்நாடன் நிலம் ஆக்கிரமிப்புக்கு உதவிய தாசில்தார், வி.ஏ.ஓ., ஆகியோர் பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது.
மூணாறு அருகே சின்னக்கானல் பாப்பாத்திசோலை பகுதியில், எர்ணாகுளம் மாவட்டம் மூவற்றுபுழா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., மாத்யூ குழல்நாடன் அரசு நிலத்தை ஆக்கிரமித்து தங்கும் விடுதி கட்டியதாக புகார் எழுந்தது. இது குறித்து லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வழக்கில் உடும்பன்சோலை தாசில்தாராக (நிலம் ஆவணம்) பணியாற்றிய ஜோஸ், சின்னக்கானல் வி.ஏ.ஓ., வாக பணியாற்றிய சுனில் கே.பால் ஆகியோர் நிலம் ஆக்கிரமிப்புக்கு எம்.எல்.ஏ.வுக்கு உதவியதாக தெரியவந்தது. அதனால் அவர்கள் வழக்கில் முறையே ஐந்து மற்றும் பதினொன்றாம் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
இவர்களை முக்கியத்துவமற்றதும், பொதுமக்களுடன் தொடர்பு இன்றியும் வகையிலான பொறுப்பில் நியமிக்குமாறு லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அரசிடம் சிபாரிசு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர்.
அதன்படி தற்போது உடும்பன்சோலை தாசில்தாராக பணியாற்றும் ஜோஸ் ஆலப்புழாவுக்கும், பள்ளிவாசல் வி.ஏ.ஓ., வாக பணியாற்றும் சுனில் கே.பால் வயநாடுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

