தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஊராட்சிகளில் அடிப்படை வசதி குறித்து எம்.எல்.ஏ., ஆலோசனை

 ஊராட்சிகளில் அடிப்படை வசதி குறித்து எம்.எல்.ஏ., ஆலோசனை

 ஊராட்சிகளில் அடிப்படை வசதி குறித்து எம்.எல்.ஏ., ஆலோசனை


ADDED : ஜன 03, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 03, 2026 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆண்டிபட்டி: ஊராட்சிகளில் பொது மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை விரைவாக நிறைவேற்றுவது குறித்து எம்.எல்.ஏ., மகாராஜன் ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதார பராமரிப்பு, தெரு விளக்கு, வடிகால் வசதி போன்றவை ஊராட்சி நிர்வாகங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. ஊராட்சியின் நிதி நிலையை பொறுத்து கூடுதல் வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை.

எனவே அடிப்படை வசதிகளை பி.டி.ஓ.,க் கள், துணை பி.டி.ஓக்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஆலோசனையில் ஊராட்சி செயலாளர்கள் செய்து வருகின்றனர். சில ஊராட்சிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுவதில்லை என்ற புகார் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ., நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பி.டி.ஓ.,க்கள் சரவணன், ஐயப்பன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜாராம் உட்பட ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பங்கேற்றனர்.

குடிநீர் வசதி, தெருவிளக்கு பராமரிப்பு ஆகியவற்றை தாமதமின்றி உடனுக்குடன் நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us