நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை திருவள்ளுவர் சிலை அருகே டீ க்கடை நடத்தி வருபவர் குமரேசன். இவரது கடையில் வேலை செய்யும் சத்யா தனது அலைபேசியை வைத்து விட்டு வேலை செய்துள்ளார். அலைபேசியை காணவில்லை.
கடையில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை பார்த்ததில், 25 வயது மதிக்கத்தக்க ஒருவர் பகலில் கடைக்குள் வந்து அலைபேசியை திருடிச்செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. தென்கரை போலீசார் பதிவுகளை வைத்து விசாரிக்கின்றனர்.

