ADDED : ஏப் 26, 2025 05:43 AM
பெரியகுளம் : பெரியகுளம் வடகரை போக்குவரத்து கழக டெப்போ அருகே பா.ஜ., வினர், காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு மோட்ச தீபம் ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினர். மாவட்ட தலைவர் ராஜபாண்டி தலைமை வகித்தார். வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சன்னாசிபாபு, ஐ.டி., பிரிவு மாநில செயலாளர் வசந்த் பாலாஜி, செயற்குழு உறுப்பினர் கோபிக்கண்ணன், நிர்வாகிகள் சுந்தர்,பாலு, முத்துப்பாண்டி, முருகன், ஐயப்பன், சோமசுந்தரம் உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
பாகிஸ்தான் கொடி எரிக்கப்பட்டது. பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தனர்.
சின்னமனூர்: மெயின் ரோட்டில் ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் சுந்தர் தலைமையில, பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடந்தது. ஹிந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மாலையில் பா.ஜ. சார்பில் உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தியடைய மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பா.ஜ. நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

