ADDED : நவ 25, 2025 01:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: பெரியகுளம் பகுதி சிவன் கோயில்களில் இரண்டாம் வார சோமவாரம் பூஜையும், மேல்மங்கலத்தில் பஜனையும் நடந்தது.
கார்த்திகை மாதங்களில் வரும் அனைத்து திங்கட்கிழமைகளில் சிவன் கோயில்களில் சோமவாரம் பூஜை கோலாகலமாக கொண்டாடப்படும். நேற்று இரண்டாம் சோமவார பூஜையை முன்னிட்டு, மேல்மங்கலம் வடக்கு தெரு பாலசுப்பிரமணியசுவாமி பஜனை மடம் சார்பில், பக்தர்கள் கீழத்தெரு, அம்மாபட்டி சாவடி உட்பட பகுதிகளுக்கு பஜனை பாடல் பாடிசென்று, வடக்கு தெருவில் நிறைவு செய்தனர். பாலசுப்பிரமணியர் கோயில், பாலகிருஷ்ணன் ஞானாம்பிகை அம்மன் கோயில் வைத்தீஸ்வரன் தையல்நாயகி அம்மன் கோயிலில் சங்க அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

