ADDED : ஏப் 13, 2025 07:16 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் முருகேசன் தலைமையில் நடந்தது.
மாவட்டத் துணைத் தலைவர் சீனியப்பன், மாவட்ட துணைச் செயலாளர் பொன்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முருகேசன் கூறியதாவது: பதிவு செய்யப்பட்ட வன்கொடுமை வழக்குகளுக்கு 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். தீண்டாமை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, மாவட்டத்திலுள்ள 8 ஒன்றியங்களிலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஏற்படுத்தி அதற்கான நிதி அரசு ஒதுக்க வேண்டும். ஆதிதிராவிடர்களுக்கான பணியிடங்கள், பழங்குடியினருக்கான பணியிடங்களில் மாநில அளவில் 10,402 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு கூறினார்.

