/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கண்காணிப்பு : மாசுபட்ட நீர் நிலைகளில் யாரும் குளிக்க கூடாது
/
கண்காணிப்பு : மாசுபட்ட நீர் நிலைகளில் யாரும் குளிக்க கூடாது
கண்காணிப்பு : மாசுபட்ட நீர் நிலைகளில் யாரும் குளிக்க கூடாது
கண்காணிப்பு : மாசுபட்ட நீர் நிலைகளில் யாரும் குளிக்க கூடாது
ADDED : செப் 06, 2025 04:11 AM

கேரள மாநிலத்தில், மூளையை தின்னும் அமீபா தொற்றால் சமீபமாக நான்கு பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் இந் நோய் தொற்று பரவாமல் இருக்க மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனரகத்திலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுருத்தி நோட்டீஸ் வந்துள்ளது. இதன் அடிப்படையில்
மாவட்டத்தில் நீர் நிலைகளான குளம், குட்டைகள், நீர்தேக்கம் பகுதியில் பல நாட்களாக தேங்கி இருக்கும் கழிவுநீரை அகற்றுவதற்கும், முன்னதாக தேங்கியுள்ள கழிவுநீரில் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை பலகை வைப்பதற்கும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தீர்த்ததொட்டி பெரியகுளம் விளையாட்டு மைதானம் பின்புறம் தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட தீர்த்ததொட்டியில்
ஏராளமானோர் அடிக்கடி குளித்து செல்வார்கள். இதன் அருகே வராகநதி செல்வதால் ஊற்று மூலம் நீர் கிடைக்கிறது. தற்போது தீர்த்ததொட்டியில் நீர் மாசுபட்டுள்ளது. பராமரிப்பு இன்றி அழுக்கு அதிகரித்து பாசி படர்ந்துள்ளது. இதில் மூளையை தின்னும் அமீபா தொற்று இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்த மாசுபட்ட நீரில் வார விடுமுறை நாட்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆபத்தை அறியாமல் பலர் குளித்து வருகின்றனர். இந்த மாசுபட்ட தண்ணீரை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.பேரூராட்சி செயல் அலுவலர் குணாளன் கூறுகையில்: தீர்த்ததொட்டியில் மாசுபட்ட தண்ணீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதுவரை யாரும் குளிக்க வேண்டாம் எனவும், மூளையை தின்னும் அமீபா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார். பெரியகுளம் நகராட்சி சுகாதாத்துறை ஆய்வாளர் அசன்முகமது நீர் தேக்க பகுதிகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். தேங்கு தண்ணீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதே போல் மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் நீர் தேக்க பகுதிகள் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.