/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் புதுப்பட்டி பகுதியில் திராட்சை கொத்துக்களை சேதப்படுத்தும் குரங்குகள்
/
கம்பம் புதுப்பட்டி பகுதியில் திராட்சை கொத்துக்களை சேதப்படுத்தும் குரங்குகள்
கம்பம் புதுப்பட்டி பகுதியில் திராட்சை கொத்துக்களை சேதப்படுத்தும் குரங்குகள்
கம்பம் புதுப்பட்டி பகுதியில் திராட்சை கொத்துக்களை சேதப்படுத்தும் குரங்குகள்
ADDED : அக் 19, 2024 11:38 PM
கம்பம், : கம்பம் புதுப்பட்டி அருகே மலையடிவார தோட்டங்களில் குரங்குகள் கூட்டமாக வந்து பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.
கம்பம் புதுப்பட்டிக்கு ஊத்துக்காடு, இடையன்குளம், கோம்பை ரோடு பகுதிகளில் அதிக விவசாய தோட்டங்கள் உள்ளது. தென்னை, வாழை , திராட்சை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் வனப்பகுதியில் இருந்து யானைகள் வந்து பயிர்களை சேதம் செய்தது.
கடந்த ஒராண்டிற்கும் மேலாக யானை நடமாட்டம் இல்லை.
நிம்மதியடைந்த விவசாயிகளுக்கு தற்போது குரங்குகளால் தொல்லை துவங்கியுள்ளது. குரங்குள் கூட்டம் கூட்டமாக வந்து தென்னை , வாழை, திராட்சை, சீத்தா பழப் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. தென்னை மரத்தில் ஏறி இளநீர் காய்களையும், மட்டைகளை ஒடித்தும் சேதத்தை ஏற்படுத்துகிறது. திராட்சை கொத்துக்களை கடித்து குதறுகிறது. வாழை, சீதா பழங்களையும் சேதப்படுத்துகிறது. குரங்குகளை விரட்ட வழி தெரியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
கம்பம் மேற்கு வனச்சரக அலுவலகத்தில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. குரங்குளை ஏதாவது செய்தால் வனத்துறை நடவடிக்கை எடுப்பார்கள் என விவசாயிகள் அஞ்சி பரிதவித்து வருகின்றனர். மாவட்ட வன அலுவலர் வேளாண் பயிர்களை சேதப்படுத்தும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.