/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொடர்ந்து பெய்த மழையால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி; நிலத்தடி நீர்மட்டம் உயரவால் பயிர் வளர்ச்சி அதிகரிப்பு

ADDED : ஜூலை 30, 2025 12:28 AM

கேரளாவில் துவங்கிய தென்மேற்குப் பருவமழை தேனி மாவட்ட எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கூடுதலாக பெய்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள லோயர்கேம்ப், பெருமாள் கோயில், கல்லுடைச்சான் பாறை, ஏகலுாத்து, கம்பம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி சாகுபடி அதிகம். மொச்சை, எள், தட்டை, அவரை உள்ளிட்ட பயிர்கள் கடந்த சித்திரை மாதத்தில் நடவு செய்யப்பட்டது. தொடர்ந்து பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து மகசூல் அதிகம் கிடைத்தது.
எள் அறுவடை செய்யும் போது மட்டும் மழை பெய்ததால் விவசாயிகளுக்கு சற்று சிரமத்தை ஏற்படுத்தியது. தற்போது அறுவடை பணிகள் முடிவடைந்து ஆடி மாதத்தில் மீண்டும் நடவு பணிகள் துவங்க உள்ளன. இதற்காக தொடர்ந்து பெய்து வந்த மழை நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் கை கொடுத்தது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் கூறும் போது:
கடந்த ஆண்டு சித்திரை மாதத்தில் துவங்கிய கோடை மழை துவக்கத்தில் பெய்த போதிலும், தொடர்ந்து பெய்யாததால் கடுமையான வெப்பம் நிலவி மானாவாரி பயிர்களை பாதிப்பிற்கு உள்ளாகியது. ஆனால் தற்போது சிறிது இடைவெளி இருந்தாலும் மழை தொடர்ந்தது. இதனால் அறுவடை முடிந்து தற்போது இரண்டாவது முறையாக ஆடி மாதத்தில் நடவுப் பணிகளை துவக்க உள்ளோம்.
மொச்சை, அவரை, தட்டை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர்வதை கண்டுபிடிக்கும் வகையில் விளை நிலங்களை ஒட்டியுள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது. தொடர்ந்து சாகுபடி செய்ய உள்ள மானாவாரி பயிர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.