/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கடந்தாண்டை விட கூடுதலாக ஏலம் போன மீன்பாசி குத்தகை
/
கடந்தாண்டை விட கூடுதலாக ஏலம் போன மீன்பாசி குத்தகை
ADDED : அக் 08, 2025 07:19 AM
பெரியகுளம் : பெரியகுளம் நீர்வளத்துறைக்கு உட்பட்ட 5 கண்மாய்களில் மீன் பாசி குத்தகை ஏலம் அதிக போட்டியின் காரணமாக கடந்தாண்டை விட 20 சதவீதம் அதிகமாக ஏலம் எடுக்கப்பட்டது.
பெரியகுளம் மஞ்சளாறு வடிநில கோட்டத்திற்கு உட்பட்ட கண்மாய்களில், ஓராண்டிற்கான மீன் பாசி குத்தகை ஏலம் நேற்று நீர்வளத்துறை உதவிபொறியாளர்கள் கமலக்கண்ணன், மனோஜ்குமார் மேற்பார்வையில் அலுவலகத்தில் நடந்தது. இதில் முதல் கட்டமாக 5 கண்மாய்கள் ஏலம் விடப்பட்டன. செட்டிகுளம் கண்மாய் ரூ.35 ஆயிரத்தி 600, வீரப்பநாயக்கன் குளம் கண்மாய் ரூ.18 ஆயிரத்து 500, பாலப்பநாயக்கன் கண்மாய் ரூ.18 ஆயிரத்து 500, இ.புதுக்குளம் கண்மாய் ரூ.79 ஆயிரம், கைக்கிளான் குளம் கண்மாய் ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்து 500 என ஏலம் எடுக்கப்பட்டது. அனைத்து கண்மாய் ஏலமும் கடந்தாண்டு ஏலத்தை விட தலா 20 சதவீதம் கூடுதலாக எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம் கடந்த காலங்களில் ஏலதாரர்கள் சிண்டிகேட் அமைத்து குறைந்த மதிப்பீட்டில் ஏலம் எடுத்தனர். இதனை முறியடிக்க இந்த முறை நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஏலம் கேட்க ஆரம்பித்தனர்.
இதனால் ஏலம் விடும் போட்டி கடுமையான போட்டியாக மாறியது. ஏல நடைமுறையால் நீர்வளத்துறைக்கு வருவாய் அதிகரித்துள்ளது. இந்த தொகையை வைத்து கண்மாய்கள் சீரமைப்பில் நீர்வளத்துறை விரைவில் அக்கறை காட்ட வேண்டும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.