/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முருங்கை கிலோ ரூ.10க்கு விற்பனை ஒரே மாதத்தில் ரூ. 70 குறைந்தது
/
முருங்கை கிலோ ரூ.10க்கு விற்பனை ஒரே மாதத்தில் ரூ. 70 குறைந்தது
முருங்கை கிலோ ரூ.10க்கு விற்பனை ஒரே மாதத்தில் ரூ. 70 குறைந்தது
முருங்கை கிலோ ரூ.10க்கு விற்பனை ஒரே மாதத்தில் ரூ. 70 குறைந்தது
ADDED : ஜூலை 25, 2025 03:01 AM
தேனி: வரத்து குறைவால் முருங்கைகாய் தரத்தினை பொருத்து கிலோ ரூ. 10 முதல் ரூ.20வரை விற்பனையானது. ஒரே மாதத்தில் கிலோவிற்கு ரூ.70 வரை குறைந்துள்ளது.
மாவட்டத்தில் கடமலைக்குண்டு, வருஷநாடு, கண்டமனுார், ஆண்டிபட்டி, தேனி, பெரியகுளம் பகுதிகளில் முருங்கை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த மாதம் அதிக மழை, குளிர்ந்த சூழல் நிலவியது இதனால் முருங்கைகாய் வரத்து குறைவாக காணப்பட்டது. இதனால் தேனி உழவர் சந்தையில் ஜூன் 22ல் முருங்கைகாய் கிலோ ரூ. 90 வரை விற்பனையானது. கடந்த சில நாட்களாக வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று முருங்கைகாய் தரத்தினை பொருத்து கிலோ ரூ.10, 15, 20 என்ற விலையில் விற்பனையானது. இதனால் காய்கறி வாங்கி வந்த பொதுமக்கள் அதிக அளவில் முருங்கைகாய் வாங்கினர்.
உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில், 'உழவர் சந்தைக்கு கடமலைக்குண்டு, கண்டமனுார் பகுதியில் இருந்து
முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த மாதத்தில் அதிகபட்சம் 200 முதல் 250 கிலோ வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. வரத்து குறைவால் விலை அதிகரித்து காணப்பட்டது. ஒரு டன்னுக்கு மேல் விற்பனைக்கு வருகிறது. இதனால் விலை குறைந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் மீண்டும் விலை உயர வாய்ப்புள்ளது என்றார்.