/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போலீசாரை கண்டித்து தாய் மகள் தீக்குளிக்க முயற்சி
/
போலீசாரை கண்டித்து தாய் மகள் தீக்குளிக்க முயற்சி
ADDED : ஜன 07, 2024 01:54 AM
பெரியகுளம்:தேனிமாவட்டம் பெரியகுளத்தில் இருதரப்பு தகராறில் உறவினர் ஒருவரை வழக்கில் போலீசார் சேர்த்ததை கண்டித்து அம்பேத்கர் சிலை முன் தாய், மகள் தீக்குளிக்க முயன்றனர்.
பெரியகுளம் அருகே தாமரைக்குளம் தாசில்தார் நகர் அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சண்முகநாதன் 39. இவரது வீட்டருகே பாஸ்கரன் என்பவரது வீட்டுக்கு செல்லும் மின் ஒயரை மாற்றுவது சம்பந்தமாக இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் சண்முகநாதனுக்கும், பாஸ்கரன் மருமகன் லூக்காவிற்கும் மோதல் ஏற்பட்டது. தென்கரை போலீசில் சண்முகநாதன் புகாரில் லூக்கா,உறவினர்கள் ராகுல், பிரியா ஆகிய 3 பேர் மீதும், லுக்கா புகாரில் சண்முகநாதன், இவரது உறவினர் கில்கிருஸ்ட்டு மீதும் தென்கரை போலீசார் நேற்று மாலை வழக்குப்பதிவு செய்தனர்.
தீக்குளிக்க முயற்சி
முன்னதாக நேற்று காலை 7:35 மணிக்கு சண்முகநாதன் மனைவி துளசி 35, இவர்களது 13 வயது மகள் தகராறு வழக்கில் போலீசார் கில்கிருஸ்ட்டு என்பவரை சேர்த்ததை கண்டித்து அங்கு அம்பேத்கர் சிலை முன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அங்கு சென்ற போலீசார் மண்ணெண்ணெய் கேனை கீழே தட்டிவிட்டு இருவர் மீதும் தண்ணீரை ஊற்றி மீட்டனர்.