ADDED : மே 29, 2025 12:39 AM

சின்னமனூர் : சேலத்தில் இருந்து தேனி மாவட்டம், உத்தமபாளையம் வந்த கார் டயர் வெடித்து வயலுக்குள் கவிழ்ந்ததில் காரில் பயணம் செய்த ஜெயா 50, அவரது மகன் கவுதம் 25, பலியாகினர். காரில் பயணம் செய்த மூவர் காயங்களுடன் உயிர் தப்பினர்.
தேனி மாவட்டம், ஆனைமலையன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைப்பாண்டி 52. இவர் மதுரையில் ஆயுதப்படை எஸ். ஐ., யாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயா 50, மகன் கவுதம் 25, மகள் அபர்ணா 22, ஆகியோர் மதுரையில் வசிக்கின்றனர். ஜெயாவின் சகோதரி தனலட்சுமி 52, உத்தமபாளையத்தில் வசிக்கிறார். மகள் அபர்ணா மருத்துவ சிகிச்சைக்காக மதுரையில் இருந்து சேலத்திற்கு காரில் ஜெயா, அபர்ணா, கவுதம், தனலட்சுமி, இவரது மகன் அருண் ஆகியோர் சென்றுள்ளனர்.
சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் இரவு சேலத்தில் இருந்து உத்தமபாளையம் நோக்கி காரில் வந்துள்ளனர். காரை அருண் ஒட்டினார். நேற்று காலை 8:00 மணியளவில் உத்தமபாளையம் துர்க்கையம்மன் கோயில் அருகில் வந்த போது, டயர் வெடித்து அருகில் இருந்த மரத்தில் மோதி, வயலுக்குள் கார் தலைகுப்புற கவிழ்ந்தது.
ஜெயா 50, கவுதம் 25, சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பலத்த காயமடைந்த தனலட்சுமி, அருண், அபர்ணா தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சின்னமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

