ADDED : அக் 12, 2024 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி ராமர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வசந்தி 52.
இவரது மகள் கோகிலா 26. சில ஆண்டுகளுக்கு முன் போடியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருடன் திருமணம் நடந்தது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கோகிலா, மகள் பிரினிதா ஸ்ரீ 3. யுடன் பெற்றோர் வீட்டில் உள்ளார்.
வீட்டில் இருந்து வெளியே சென்ற கோகிலா அவரது மகளுடன் காணவில்லை. வசந்தி புகாரில் தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.