/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தற்காலிக சீரமைப்பால் வாகன ஓட்டிகள் பாதிப்பு
/
தற்காலிக சீரமைப்பால் வாகன ஓட்டிகள் பாதிப்பு
ADDED : ஜூலை 17, 2025 03:26 AM

கூடலுார்:குண்டும் குழியுமான ரோடுகளை தற்காலிகமாக சீரமைப்பதாக கூறி கற்களை போட்டு நிரப்புவதால் விபத்து அபாயம் உள்ளது என வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர்.
கூடலுாரில் இருந்து குள்ளப்பக் கவுண்டன்பட்டி, கருநாக்க முத்தன்பட்டிக்கு செல்லும் 4 கி.மீ., துார மாநில நெடுஞ்சாலைக்கு கட்டுப்பட்ட சாலை உள்ளது. கூடலுாரின் துவக்க பகுதியில் பல மாதங்களாக குண்டும் குழியுமாக உள்ளது. இந்நிலையில் இதை தற்காலிகமாக சீரமைப்பதாக கூறி கற்களை போட்டு நிரப்பி உள்ளனர். வாகனங்களுக்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
மேலும் விபத்துக்கள் ஏற்பட காரணமாகவும் அமைந்துள்ளது என வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த மழையால் சாலையில் ஏற்பட்டுள்ள சேதம் மேலும் அதிகரித்துள்ளது.
தற்போது கேரளாவில் இருந்து சுருளி அருவிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் அதிகமாக இவ்வழியே செல்கின்றன. அதனால் உடனடியாக அப்பகுதியில் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் முழுமையாக சீரமைப்பது அவசர, அவசியமாகும்.