/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி-மதுரை ரோட்டில் தற்காலிக சர்வீஸ் ரோடு சேதம் தடுமாறும் வாகன ஓட்டிகள்

ADDED : டிச 06, 2024 06:13 AM

தேனி: தேனி மதுரை ரோட்டில் மேம்பால பணிக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக ரோடு மழையினால் சேதமடைந்து, ஆங்காங்கே பள்ளங்கள் உருவாகி உள்ளது. டூவீலர், ஆட்டோவில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேனி- மதுரை ரோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினரால் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகிறது. இதில் ரயில்வே கேட் முதல் சிப்காட், தனியார்பள்ளி வழியாக செல்லும் ரோட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தற்காலிக ரோடு அமைக்கப்பட்டது.
இந்த ரோட்டில் கற்கள், மண் கொட்டி தயார் படுத்தியிருந்தனர். கடந்த வாரம் பெய்த மழையில் ரோட்டின் பல இடங்களில் மண் கரைந்து பள்ளம் ஏற்பட்டது. தற்போது மழைநீர் தேங்கி நிற்கிறது. இவ்வழியாக டூவீலர், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணிப்போர் தடுமாறி விழும் சூழல் உள்ளது. டூவீலரில் செல்லும் சிலர் விழுந்து எழுவதும் தொடர்கிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தற்காலிக சர்வீஸ் ரோட்டினை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.