/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சேதம் அடைந்த ரோடால் வாகன ஓட்டிகள் சிரமம்
/
சேதம் அடைந்த ரோடால் வாகன ஓட்டிகள் சிரமம்
ADDED : அக் 25, 2025 04:51 AM

போடி: போடி அருகே விசுவாசபுரம் - பத்ரகாளிபுரம் செல்லும் ரோடு சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறி கழிவுநீர் குளம் போல தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
போடியில் இருந்து டொம்புச்சேரி, உப்புக்கோட்டை வழியாக தேனி செல்லும் மெயின் ரோட்டில் உள்ளது விசுவாசபுரம் - பத்ரகாளிபுரம் செல்லும் ரோடு. இந்த ரோட்டில் கிராமங்களுக்கு செல்லும் பஸ்களும், விவசாய விளை பொருட்கள், தளவாட பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்ல பயன்படுகிறது. கூழையனூர், பாலார்பட்டி, காமராஜபுரம் உள்ளிட்ட கிராம மக்களும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்த ரோடு முழுவதும் சேதம் அடைந்துள்ளது.இதனால் டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் குண்டும், குழியுமாக மாறி உள்ளது.
மழைக் காலங்களில் பள்ளம் தெரியாத அளவிற்கு ரோடு சிறுகுளம் போல் தண்ணீர் தேங்கி உள்ளது. வாகனங்கள் வேகமாக வரும் போது நடந்து செல்வோர் மீது கழிவுநீர் அபிஷேகம் நடக்கிறது. கழிவுநீர் தேக்கத்தால் அருகே குடியிருக்கும் மக்களுக்கு சுகாதாரகேடு ஏற்படுகிறது. சேதம் அடைந்த ரோட்டை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் மக்கள் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.
பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன் சேதம் அடைந்த ரோட்டை சீரமைத்திட நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

