/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியகுளம் ரோட்டில் தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமம்
/
பெரியகுளம் ரோட்டில் தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமம்
பெரியகுளம் ரோட்டில் தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமம்
பெரியகுளம் ரோட்டில் தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமம்
ADDED : டிச 17, 2024 04:36 AM

பெரியகுளம்: பெரியகுளம் - தேனி மெயில் ரோடு சருத்துப்பட்டி அருகே ஊருணியில் வெளியேறும் மழைநீர் கடந்த செல்ல முடியாமல் ரோட்டில் தேங்குவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
பெரியகுளம் -தேனி மெயின் ரோட்டில் சருத்துப்பட்டி பிரிவு உள்ளது. இக் கிராமத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீர், மழைநீர் இங்குள்ள சிறு ஊருணியில் தேங்குகிறது.
மழை காலங்களில் ஊருணி நிரம்பி கால்வாய் வழியாக ரோட்டில் உள்ள பாலத்தின் வழியாக மேற்கு பகுதியில் மழைநீர் வெளியேறும். ரோட்டில் இருபுறமும் முறையான பராமரிப்பு இல்லாததால் செடி, கொடிகள் வளர்ந்து மழை நீர் கால்வாய், பாலத்தில் புதர் மண்டியுள்ளது.
இதனால் மழைநீர் பாலத்திற்கு கீழ் செல்ல முடியாமல் தேனி -பெரியகுளம் மெயின் ரோட்டில் நான்கு நாட்களாக தேங்குகிறது.
சபரிமலை சீசனால் மெயின்ரோட்டில் அதிக வாகனங்கள் செல்கிறது. வாகனங்கள் மழைநீரை கடந்து செல்லும் போதும் ரோட்டில் நடந்து செல்வோர், பக்தர்கள் மீது கழிவு நீர் தெளிக்கப்படுகிறது.
இரவில் டூவீலரில் வருவோர் மழைநீர் தெரியாமல் வாகனத்தை ஓட்டி கீழே விழுந்து விபத்திற்குள்ளாகின்றனர்.
மாநில நெடுஞ்சாலை துறை கால்வாய், பாலம் சீரமைத்து மழைநீர் கடந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

