/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் நடக்கும் மேம்பால பணியால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
தேனியில் நடக்கும் மேம்பால பணியால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
தேனியில் நடக்கும் மேம்பால பணியால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
தேனியில் நடக்கும் மேம்பால பணியால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : மே 30, 2024 03:57 AM

தேனி: தேனியில் நடந்து வரும் மேம்பால பணியால் ரோடு குண்டும் குழியுமாக உருமாறியதில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். இந்த ரோட்டில் தற்காலிக தார்ரோடு அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தேனி மதுரை ரோட்டில் ரூ.90 கோடி மதிப்பில் 1.26 கி.மீ., நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பணிகள் துவங்கி இரண்டாண்டுகள் முடிய உள்ளன. ஆனாலும் பாலத்திற்கான துாண்கள் அமைக்கும் பணி கூட முழுமை பெற வில்லை. அரண்மனைப்புதுார் விளக்கு பகுதியில் மட்டும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
இப்பகுதியில் ரயில்வே தண்டவாள பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் ஓராண்டுக்கு முன் அகற்றப்பட்டன. இந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதி தற்போது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு ரோடு இல்லாத குண்டு குழியுமான பகுதியில் வாகனங்கள் குதித்து, குதித்து செல்லும் சூழல் உள்ளது. மழை இல்லாத போது அதிக அளவில் துாசியும், மழைபெய்தால் சேறும் சகதிமாக ரோடு மாறி விடுகிறது. குறிப்பிட்ட துாரம் இந்த ரோட்டில் பயணிப்பதில் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். டூவீலர்களில் வரும் முதியோர்கள், பெண்கள் பலர் தடுமாறி கீழே விழுந்து செல்வது தினமும் தொடர்கிறது. ஆனால் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் இதனை கண்டும் காணாமல் உள்ளனர். எனவே, பாலம் பணி முடிய இன்னும் ஓராண்டுக்கு மேல் ஆகிவிடும். அதுவரை இந்த ரோட்டில் செல்லும் பயணிக்கும் பொதுமக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாக வேண்டும். எனவே, இப் பகுதியில் தற்காலிக ரோடு வசதி செய்து சிரமம் இன்றி வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்
தற்காலிக ரோடு அவசியம் பாண்டி, எலக்ட்ரிசியன், ஆண்டிப்பட்டி.குண்டும் குழியுமான ரோட்டில் டூவீலர், பஸ்களில் பயணிப்பது சிரமமாக உள்ளது. டூவீலரில் செல்வோர் தடுமாறி மாற்ற வாகனங்களில் மோதும் நிலை உள்ளது. 500 மீ.,க்கும் குறைவான துாரத்தை கடந்து செல்ல 20 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. புழுதி பறக்கும் நேரத்தில் விபத்துக்கள் தவிர்க்க முடியாததாகிறது. பள்ளங்களாக காணப்படும் மண் ரோட்டினை, மேம்பால பணி முடியும் வரை தற்காலிக தார்ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மழை பெய்து வருவதால் சர்வீஸ் ரோட்டில் தார்ரோடு அமைக்கும் பணி தாமதமாகிறது. விரைவில் சர்வீஸ் ரோட்டில் தார்ரோடு அமைக்கப்படும்', என்றனர்.