/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முன்னறிவிப்பின்றி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணி இரவில் வாகன ஓட்டிகள் அவதி
/
முன்னறிவிப்பின்றி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணி இரவில் வாகன ஓட்டிகள் அவதி
முன்னறிவிப்பின்றி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணி இரவில் வாகன ஓட்டிகள் அவதி
முன்னறிவிப்பின்றி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணி இரவில் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : நவ 10, 2024 06:33 AM
தேனி: பழனிசெட்டிபட்டியில் நடைமேம்பால பணிக்காக தேசிய நெடுஞ்சாலையில் முன்னறிவிப்பு இன்றி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதால் இரவில் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
பழனிசெட்டிபட்டியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நடைமேம்பால பணிக்காக நேற்று இரவு 10:00 மணி முதல் இன்று காலை 10:00 மணிவரை 12 மணிநேர கொச்சி- தனுஷ்கொடி தேசிய நெடுஞ்சாலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென போக்குவரத்து மாற்றம் செய்து நடைமுறைப்படுத்தினர்.
திடீர் போக்குவரத்து மாற்றத்தால் வாகன ஓட்டிகள் தேனியில் இருந்து மதுராபுரி விலக்கு சென்று பைபாஸ் ரோட்டில் செல்லும் நிலை உருவானது.
கம்பம், சின்னமனுார் பகுதியில் தேனிக்கு வரும் வாகனங்கள் வீரபாண்டி பைபாஸ் வழியாக சென்று தேனிக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டது.
சில வாகன ஓட்டிகள் பழனிசெட்டிபட்டி வரை சென்று திரும்பும் நிலை ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தேசிய நெடுஞ்சாலையில் மேற்கொள்ளும் பணிகள் அவசியம் என்றாலும் துறை அதிகாரிகள் பணிகள் நடைபெறுவது தொடர்பாக எந்த முன்னறிவிப்பும் பொதுமக்களுக்கு தெரிவிப்பது இல்லை.
இதனால் பணிகள் நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
பணி நடைபெறும் போது போக்குவரத்து மாற்றம் தொடர்பான முன்னேற்பாடுகள், முன்னறிவிப்புகளை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் முறையாக ஒரிரு நாட்குளுக்கு முன்பாவது அறிவிக்க வேண்டும்.