/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி போக்குவரத்து மாற்றத்தில் திட்டமிடல் இன்றி ஸ்தம்பித்தது நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
/
தேனி போக்குவரத்து மாற்றத்தில் திட்டமிடல் இன்றி ஸ்தம்பித்தது நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
தேனி போக்குவரத்து மாற்றத்தில் திட்டமிடல் இன்றி ஸ்தம்பித்தது நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
தேனி போக்குவரத்து மாற்றத்தில் திட்டமிடல் இன்றி ஸ்தம்பித்தது நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : பிப் 13, 2024 05:15 AM

தேனி : தேனி நகர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பால பணிக்காக நேற்று மதியம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. போலீசாரின் முறையான திட்டமிடல் இல்லாததால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல இடங்கள் ஸ்தம்பித்தது.
தேனி வழியாக செல்லும் கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகிறது. இப்பணி ரூ.90.02 கோடியில் 1.25 கி.மீ., துாரத்திற்கு பாலம் அமைக்கும் பணி அக்.,ல் துவங்கியது. பல போராட்டங்களுக்குப்பின் துாண்கள் அமைக்கும் பணி 40 சதவீதத்திற்கும் மேல் முடிந்துள்ளது.
அரண்மனைப்புதுார் விலக்குப்பகுதியில் துாண்கள் மேல் வைப்பதற்காக கான்கிரீட் பிளாக்குகள் அமைக்கப்பட்டன. அதனை துாண்கள் மீது பொருத்துவற்காக பணி துவங்கப்பட்டது. அதற்காக தேனி- மதுரை ரோட்டில் தோட்டக்கலைத்துறை அலுவலம் முதல் பாரஸ்ரோடு ரவுண்டான வரை போக்குவரத்து தடை செய்யப்படுவதாகவும், பஸ்கள், வாகனங்கள் அன்னஞ்சி விலக்கு வழியாக செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசாரால் தெரிவிக்கப்பட்டது.கான்கிரீட் பிளாக் பொருத்தும் பணி நேற்று மதியம் நடந்தது.
இதனால் தேனி நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனால் பஸ்கள், கனரக வாகனங்கள், ஆட்டோ, கார்கள் உள்ளிட்டவை பாரஸ்ட்ரோடு, என்.ஆர்.டி., ரோடு, கே.ஆர்.ஆர்., நகர் வழியாக புதுபஸ் ஸ்டாண்ட் சென்றன. எதிர்திசையிலும் வாகனங்கள் வரிசையாக நின்றன. இதனால் புதுபஸ் ஸ்டாண்ட அருகே உள்ள சந்திப்பில் 4 திசைகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்தை சீரமைக்க இயலாமல் போலீசார் திணறினர்.சரியான திட்டமிடுதல் இல்லாத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பாலப்பணிகள் நிறுத்தப்பட்டு மதுரை ரோட்டில் மீண்டும் போக்குவரத்து மாற்றப்பட்டது.