/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சாக்கடை பாலத்தால் விபத்திற்குள்ளாகும் வாகன ஓட்டிகள்; ஊஞ்சாம்பட்டி ஊராட்சி மரியஜோசப் நகர் குடியிருப்போர் அவதி
/
சாக்கடை பாலத்தால் விபத்திற்குள்ளாகும் வாகன ஓட்டிகள்; ஊஞ்சாம்பட்டி ஊராட்சி மரியஜோசப் நகர் குடியிருப்போர் அவதி
சாக்கடை பாலத்தால் விபத்திற்குள்ளாகும் வாகன ஓட்டிகள்; ஊஞ்சாம்பட்டி ஊராட்சி மரியஜோசப் நகர் குடியிருப்போர் அவதி
சாக்கடை பாலத்தால் விபத்திற்குள்ளாகும் வாகன ஓட்டிகள்; ஊஞ்சாம்பட்டி ஊராட்சி மரியஜோசப் நகர் குடியிருப்போர் அவதி
ADDED : ஏப் 16, 2025 07:59 AM

தேனி : தேனி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மரியஜோசப் நகரில் குறுக்தெருக்களில் உயரமாக அமைக்கப்பட்ட சாக்கடை பாலத்தால் தினமும் விபத்துக்கள் ஏற்படுகிறது. சேதமடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தால் எப்போது வேண்டுமானாலும் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது என குடியிருப்போர் புலம்புகின்றனர்.தேனி ஒன்றியம் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி தேனி நகருக்கு மிக அருகில் அமைந்துள்ளன. இந்த ஊராட்சிக்குட்பட்ட 9,10 வது வார்டுகள் பெரியகுளம் ரோட்டில் மரியஜோசப் நகரில் அமைந்தள்ளது. இந்த நகரில் 5 குறுக்குதெருக்களில் 150க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு ஊராட்சி சார்பில் அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை. இதனால் இங்கு குடியிருப்போர் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
குடியிருப்போர் ராஜம்மாள், சந்திரா, முத்தையா, முத்துராமானுஜம், வடமலை ஆகியோர் தினமலர் நாளிதழ் குடியிருப்போர் குரல் பகுதிக்காக கூறியதாவது: இந்த பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன் குடியிருப்புகள் உருவாகின. பெரியகுளம் ரோட்டில் இருந்து இந்த பகுதி பள்ளத்தில் அமைந்துள்ளது. இங்கு மெயின் ரோடு 12 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அந்த ரோட்டில் தற்போது பல இடங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து செல்லரித்து காணப்படுகிறது. குறுக்கு தெருக்களில் சில ஆண்டுகளுக்கு முன் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டது. ஆனால், மெயின் ரோட்டில் இணைக்கும் சிறிய சாக்கடை பாலத்தை 3 அடி உயரத்தில் அமைத்து விட்டனர். இதனால் டூவீலரில் வருபவர்கள், நடந்து வருபவர்கள் உயரமான சாக்கடை பாலத்தில் தடுமாறி கீழே விழுவந்து காயமடைகின்றனர்.
சுகாதாரக்கேடு
இப்பகுதியில் உள்ள சாக்கடைகளை துார்வர வேண்டும் என பலமுறை ஊராட்சியில் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.
வேறு பகுதிகளில் இருந்து வரும் சிலர் நகரின் நுழைவுப்பகுதி குப்பையை கொட்டி செல்கின்றனர். சிலர் இறந்த நாய்களையும் இந்த பகுதியில் வீசி செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. பல பகுதிகளில் இருந்து வரும் மாடுகள் குப்பையை கிளறுகின்றன. அருகில் பள்ளி மாணவர்கள், பெண்கள் செல்லும் போது முட்டுவது போல் வருகின்றன. இதனால் அச்சத்துடன் ரோட்டில் செல்ல வேண்டி உள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு
ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய் அமைத்திருந்தாலும், சரியாக குடிநீர் வழங்குவதில்லை. இதனால் ஆழ்துளைகிணறு நீரை பரும் நிலை உள்ளது. இதனால் சிலர் நோய் வாய்படுகின்றனர். அருகில் உள்ள காலி நிலங்களில் விஷஜந்துக்கள் அதிகம் காணப்படுகிறது. இதனால் மாலையில் வீட்டை விட்டு வெளியே வர பயப்படும் நிலை உள்ளது. தெருவில் அமைக்கப்பட்டுள்ள சில மின்கம்பங்கள் சிதலமடைந்து காணப்படுகிறது. பருவமழை துவங்குவதற்குள் அவற்றை மாற்றி அமைக்க வேண்டும். மின்கம்பங்களை மாற்ற கோரி ஊராட்சியில் தெரிவித்தும் பயனில்லை. மின்வாரியத்தில் முறையிட்டாலும், ஊராட்சி மூலம் தெரிவிக்க கூறுகின்றனர். ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

