/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காட்டு யானைகள் நடமாட்டம் தொழிலாளர்கள் கலக்கம்
/
காட்டு யானைகள் நடமாட்டம் தொழிலாளர்கள் கலக்கம்
ADDED : செப் 08, 2025 06:19 AM

மூணாறு : மூணாறை சுற்றி பல பகுதிகளில் காட்டு யானைகள் நடமாடியதால் தொழிலாளர்கள், பொது மக்கள் ஆகியோர் கலக்கம் அடைந்துள்ளனர்.
மூணாறு பகுதியில் படையப்பா, விரிந்த கொம்பன், ஒரு தந்தத்தைக் கொண்ட இரண்டு ஒற்றை கொம்பன்கள் ஆகிய ஆண் காட்டு யானைகள் நடமாடி வருகின்றன. கடந்த சில நாட்களாக படையப்பா குண்டளை, அருவிக்காடு, செண்டுவாரை ஆகிய எஸ்டேட் பகுதிகளில் நடமாடி வருகிறது. குண்டளை எஸ்டேட்டில் குடியிருப்புப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடமாடிய படையப்பா வீடுகளின் அருகில் இருந்த வாழைகளை தின்றதுடன், அவற்றை சேதப்படுத்தி விட்டு சென்றது. மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் நகரில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் உள்ள டி.எஸ்.பி., குடியிருப்பு பகுதியில் நேற்று காலை காட்டு யானை நடமாடியது. அதே வழியில் பெரியவாரை எஸ்டேட் தொழிற்சாலைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு நடமாடிய ஒற்றை கொம்பன் 2 கி.மீ., துாரம் ரோடு வழியாக கன்னிமலை எஸ்டேட் தொழிற்சாலை பகுதிக்கு இரவு 10:00 மணிக்கு சென்றது.
அங்கு குடியிருப்பு பகுதியில் நடமாடிய ஒற்றைக் கொம்பன் அருகில் உள்ள காட்டிற்குள் சென்றது. 2 கி.மீ., துாரம் ரோட்டில் யானை சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காட்டு யானைகள் நடமாட்டத்தால் பொது மக்கள், தொழிலாளர்கள் ஆகியோர் கலக்கம் அடைந்தனர்.