/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடியில் இருந்து மதுரைக்கு காலையில் ரயில் இயக்க வேண்டும் மாவட்ட வளர்ச்சி கூட்டத்தில் எம்.பி., வலியுறுத்தல்

ADDED : அக் 01, 2025 10:20 AM

தேனி : போடியில் இருந்து மதுரைக்கு காலையில் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வளர்ச்சி கண்காணிப்பு குழு கூட்டத்தில் ரயில்வே அதிகாரிகளுக்கு எம்.பி., தங்கதமிழ்செல்வன் வலியுறுத்தினார்.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் தங்கதமிழ்செல்வன் எம்.பி., தலைமையில் மாவட்ட வளர்ச்சி, கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் ரஞ்ஜீத்சிங் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ., சரவணக்குமார், டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதாஹனீப், பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., சையது முகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கொட்டக்குடி ஆற்றில் புதிய அணை கட்டுவது, கண்ணகி கோவிலுக்கு தமிழக பகுதி வழியாக ரோடு அமைத்தல், சாக்கலுத்துமேட்டு வழியாக கேரளாவிற்கு ரோடு அமைக்க சர்வே பணிகள், குளங்கள் துார்வாருதல் உள்ளிட்டவை பற்றி ஆலேசிக்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு காலையில் ரயில் இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே அதிகாரிகளுக்கு எம்.பி., வலியுறுத்தினார்.
மேலும், பாண்டியன் அதிவிரைவு ரயிலை போடியில் இருந்து இயக்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. மாவட்டத்தில் இம்மாத இறுதிக்குள் 6 லட்சம் பனைவிதைகள் நடவு செய்ய துறைவாரியாக இலக்கு நிர்ணயித்து கலெக்டர் உத்தவிட்டார்.
எம்.பி.க்கு பா.ஜ., எதிர்ப்பு தங்கதமிழ்செல்வன் தொகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளாமல் வளர்ச்சி, கண்காணிப்பு குழு கூட்டத்தில் பங்கேற்பதை கண்டித்து பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின் கூட்டம் முடிந்துவந்த போது எம்.பி., கலெக்டரிடம் மனு அளித்தனர். தொடர்ந்து மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அதனை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர்.