/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு மருத்துவக்கல்லுாரியில்எம்.ஆர்.ஐ., ஸ்கேன்... முடக்கம்: தேனிக்கு அழைத்து செல்வதால் நோயாளிகள் அவதி
/
அரசு மருத்துவக்கல்லுாரியில்எம்.ஆர்.ஐ., ஸ்கேன்... முடக்கம்: தேனிக்கு அழைத்து செல்வதால் நோயாளிகள் அவதி
அரசு மருத்துவக்கல்லுாரியில்எம்.ஆர்.ஐ., ஸ்கேன்... முடக்கம்: தேனிக்கு அழைத்து செல்வதால் நோயாளிகள் அவதி
அரசு மருத்துவக்கல்லுாரியில்எம்.ஆர்.ஐ., ஸ்கேன்... முடக்கம்: தேனிக்கு அழைத்து செல்வதால் நோயாளிகள் அவதி
ADDED : ஜூன் 29, 2025 12:13 AM

தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை க.விலக்கில் அமைந்துள்ளது. இந்த மருத்துவனைக்கு சிகிச்சைக்காக தேனி மட்டுமின்றி, அருகில் உள்ள மாவட்டத்தை சேர்ந்தவர்கள், கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர். உள்நோயாளிகளாக 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். இதில் நரம்பியல், மூட்டு பிரச்னை உள்ளவர்கள், விபத்தில் சிக்கியவர்களுக்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்கப்படுகிறது. அதன் மூலம் குறிப்பிட்ட உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை துல்லியமாக அறிந்து மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.
இங்குள்ள மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பழைய கட்டடத்தின் தரைத்தளத்தில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் சென்டர் அமைந்துள்ளது. இதனை நோயாளிகள் பயன்படுத்தினர். இங்கு முதல்வர் மருத்துவக்காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு இலவசமாகவும், காப்பீட்டு திட்டத்தில் இணையதாவர்கள் குறிப்பிட்ட தொகை செலுத்தி ஸ்கேன் எடுக்கப்பட்டு வந்தது.
ஆனால், கடந்த ஒரு மாதமாக எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் தேனி நகர்பகுதிக்கு வந்து எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இதுபற்றி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் முத்துசித்ரா கூறுகையில்,' எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்கும் பணி தனியார் நிறுவத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வந்தது.
தற்போது அரசு சார்பில் ஸ்கேன் எடுக்கும் பணியை செய்ய உள்ளது. இதற்காக ரூ.8 கோடியில் புதிய எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரம் பொருத்தும் பணி துவங்க உள்ளதால், ஸ்கேன் எடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இயந்திரம் பொருத்தும் வரை நோயாளிகள், தேனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இம்மருத்துவமனையில் 2023ல் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்த போது எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்க நோயாளிகளிடம் பணம் வசூலித்ததால் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்தது குறிப்பிட தக்கது.