/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கவுமாரியம்மன் கோயில் விழாவிற்கு முகூர்த்தக்கால் நடல்
/
கவுமாரியம்மன் கோயில் விழாவிற்கு முகூர்த்தக்கால் நடல்
கவுமாரியம்மன் கோயில் விழாவிற்கு முகூர்த்தக்கால் நடல்
கவுமாரியம்மன் கோயில் விழாவிற்கு முகூர்த்தக்கால் நடல்
ADDED : ஜூன் 17, 2025 06:56 AM

பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித் திருவிழாவிற்காக நேற்று முகூர்த்தக்கால் ஊன்றும் விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
பெரியகுளம், தென்கரை கவுமாரியம்மன் கோயில் ஹிந்துஅறநிலையத்துறைக்கு உட்பட்டது. இக் கோயிலில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு நேற்று முகூர்த்தக்கால் ஊன்றும் விழா நடந்தது.
வர்த்தகசங்க தலைவர் சிதம்பரசூரியவேலு, செயல் அலுவலர் சுந்தரி, பூஜாரிகள், மண்டகபடிதாரர்கள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஜூலை 1ல் சாட்டுதல், கம்பம் நடுதல், ஜூலை 7ல் கொடியேற்றத்துடன் 10 நாட்கள் திருவிழா துவங்கும்.
முக்கிய திருவிழாவான ஜூலை 15ல் மாவிளக்கு, மறுநாள் ஜூலை 16ல் பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து அம்மனை வழிபடுவர். ஜூலை 22ல் மறுபூஜை நடக்கும்.