/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குறையுது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்; நீர் திறப்பை குறைக்க வலியுறுத்தல்
/
குறையுது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்; நீர் திறப்பை குறைக்க வலியுறுத்தல்
குறையுது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்; நீர் திறப்பை குறைக்க வலியுறுத்தல்
குறையுது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்; நீர் திறப்பை குறைக்க வலியுறுத்தல்
ADDED : நவ 11, 2024 12:33 AM

கூடலுார்; முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் மழையின்றி நீர்மட்டம் குறைந்து வருகிறது. தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை குறைக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் சில நாட்களாக மழையின்றி நீர்மட்டம் குறைந்து வருகிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி நீர்மட்டம் 124.60 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி).
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 765 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 3538 மில்லியன் கன அடியாகும். தமிழகப்பகுதிக்கு குடிநீர், நெல் சாகுபடிக்காக வினாடிக்கு 1100 கன அடி திறக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் வலியுறுத்தல்:
முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன.
தற்போது முதல் போக சாகுபடிக்கான அறுவடை செய்யும் பணி முடிவடைந்துள்ளது.
வழக்கமாக ஆண்டுதோறும் முதல் போக சாகுபடி முடிந்தவுடன் தொடர்ந்து 2ம் போக சாகுபடிக்கான நெல் நாற்றுகள் வளர்க்கும் பணி துவங்கி விடும். சமீபத்தில் விவசாயிகளை அழைத்து நீர்வளத் துறையினர் நடத்திய கூட்டத்தில் அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால் 2ம் போகத்திற்கான நாற்றுகள் வளர்க்கும் பணியை துவக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டனர்.
ஆனால் நவம்பர் இறுதி வாரத்தில் நீர்ப்பிடிப்பில் கன மழை பெய்து நீர்மட்டம் உயரும் என்ற எதிர்பார்ப்பில் ஏராளமான விவசாயிகள் நாற்று வளர்க்கும் பணியை துவக்கியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது நீர்மட்டம் குறையாமல் தவிர்க்க நீர் திறப்பை 1100 கன அடியிலிருந்து 500 கன அடியாக குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.