/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பல்நோக்கு விளையாட்டு மைதானம் திறப்பு
/
பல்நோக்கு விளையாட்டு மைதானம் திறப்பு
ADDED : ஜன 28, 2026 05:58 AM
தேனி: தேனியில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை புல் தரையுடன் கூடிய பல்நோக்கு விளையாட்டு மைதானத்தை விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
தேனி பெருந்திட்ட வளாகத்தில், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலகம் எதிரில் மாவட்ட கனிமவள நிதியின் கீழ் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில், 15,000 சதுர அடி (40 மீட்டர் நீளம், 35 மீட்டர் அகலம்) பரப்பளவில் பகல் நேரம் மட்டுமல்லாமல் இரவு நேர பயிற்சிக்கும் ஏதுவாக மின் விளக்குகள் மற்றும் செயற்கை புல் தரையுடன் கூடிய பல்நோக்கு விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட்டது.
இதனை பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள், விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்காக கலெக்டர் ரஞ்ஜீத் சிங் திறந்து வைத்தார்.
எஸ்.பி., சினேக ப்ரியா முன்னிலை வகித்தார். டி.ஆர்.ஓ., ராஜகுமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தமிழரசி, ஏ.டி. எஸ்.பி., கலைக்கதிரவன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

