/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மும்பை போலீசிடம் ரூ.35 லட்சம் மோசடி
/
பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மும்பை போலீசிடம் ரூ.35 லட்சம் மோசடி
பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மும்பை போலீசிடம் ரூ.35 லட்சம் மோசடி
பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மும்பை போலீசிடம் ரூ.35 லட்சம் மோசடி
ADDED : செப் 26, 2025 02:42 AM

பெரியகுளம்:மும்பை போலீஸ்காரரிடம், 35 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலில், மூவரை போலீசார் கைது செய்தனர்.
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை தார்ரே காவல் குடியிருப்பை சேர்ந்தவர் லட்சுமண் தம்னோ குராடே, 33. பந்த்ரா காவல் கட்டுப்பாட்டு அறையில் போலீஸ்காரர்.
ஆசைவார்த்தை இவரிடம், தமிழகத்தில், 500 ரூபாய் கொடுத்தால், தற்போது செல்லாத, 2,000 ரூபாய் நோட்டுகள் தருவர் என ஆசைவார்த்தை கூறி, சென்னையை சேர்ந்த செந்தில் என்பவரிடம் பேச வைத்தார்.
செல்லாத 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றித் தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து, லட்சுமண் குராடே தன் மைத்துனர் கங்காதர் சோமானிங் மஞ்சுல்கருடன் செப்., 22ல் வத்தலக்குண்டு வந்தார்.
தேனி அருகே, சேகர்பாபு, 45, என்பவரை, குராடேவுக்கு செந்தில் அறிமுகப்படுத்தினார். அவரிடம், 35 லட்சம் ரூபாயை குராடே கொடுத்தார்.
அவர்கள், பெரியகுளம் அருகே நல்லகருப்பன்பட்டியில் ஒரு வீட்டில் இருந்த போது, அங்கு வந்த சிலர், தங்களை போலீஸ் எனக்கூறி குராடேவை மிரட்டினர். காரில், 35 லட்சம் ரூபாயுடன் சேகர்பாபு, செந்தில் தப்பினர்.
மற்றொரு காரில், 'செட் - அப் போலீஸ்' நான்கு பேரும், குராடேயை காரில் ஏற்றி, செம்பட்டி -- திண்டுக்கல் பைபாஸ் அருகே இறக்கி விட்டு தப்பினர்.
இந்த கும்பலிடம், 35 லட்ச ரூபாயை பறி கொடுத்த குராடே, வடகரை போலீசில் புகார் அளித்தார்.
செட் - அப் போலீஸ் போலீஸ் விசாரணையில், மும்பை போலீஸ்காரர் குராடேயிடம் பணத்தை பறித்தது, சேகர்பாபு, செந்தில் நண்பர்களான போலீஸ் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட நாகநாகேந்திரன், 33, ராம்குமார், 32, அஜீத்குமார், 30, பார்த்திபன், 35, ஆகியோர் என தெரிந்தது.
இவர்கள் அனைவரும் பெரியகுளம் மற்றும் தேனி பகுதிகளை சேர்ந்தவர்கள்.
அஜித்குமார், நாகநாகேந்திரன், ராம்குமார் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். பணத்துடன் தப்பிய சேகர்பாபு, செந்தில், சுபாஷ், பார்த்திபனை தேடி வருகின்றனர்.