/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இரண்டு கண்மாய்களை பராமரிக்க நகராட்சி நடவடிக்கை தேவை
/
இரண்டு கண்மாய்களை பராமரிக்க நகராட்சி நடவடிக்கை தேவை
இரண்டு கண்மாய்களை பராமரிக்க நகராட்சி நடவடிக்கை தேவை
இரண்டு கண்மாய்களை பராமரிக்க நகராட்சி நடவடிக்கை தேவை
ADDED : ஏப் 14, 2025 06:00 AM
சின்னமனுார்:''சின்னமனுாரில் அதிக எண்ணிக்கையில் ஆண்களும், பெண்களும் நடைப்பயிற்சி செய்யும் சங்கிலித்தேவன் கண்மாய் நடைப்பயிற்சி தளத்தில் புதர்களை அகற்றவும், விஸ்வக்குளம் கண்மாயில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்கவும் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என, கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நகராட்சியில் நீண்ட காலமாக ஆக்கிரமிப்பில் இருந்த சங்கிலித்தேவன் கண்மாய், விஸ்வக்குளம் கண்மாய்களை மீட்டு ரூ.2 கோடியில் நகராட்சி சாப்பில் சீரமைக்கப்பட்டது. குறிப்பாக சங்கிலித்தேவன் கண்மாயில் சுற்றிலும் நடைப்பயிற்சி தளம் அமைக்கப்பட்டது. ஆங்காங்கே இருக்கைகளும் அமைக்கப்பட்டன. சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டது.
தற்போது தினமும் காலையிலும், மாலையிலும் நுாற்றுக் கணக்கான ஆண்களும், பெண்களும் இந்த கண்மாய் நடைப்பயிற்சி மேடையை சுற்றி பயிற்சி மேற்கொள்கின்றனர்.
ஆனால், தொடர் கண்காணிப்பு இல்லாததால் கண்மாயின் கிழக்குப் பகுதியில் நடைபயிற்சி மேடையை ஒட்டி செடி கொடிகள் வளர்ந்து புதர்களாக மாறி வருகிறது. இரவு 8:00 மணி வரை நடைப்பயிற்சி செய்கின்றனர் . புதர்களை அகற்ற நகராட்சி முன்வர வேண்டும். கண்மாயின் தென்மேற்கு மூலையில் வேலி சேதப்படுத்தப்பட்டு, இரவு நேரங்களில் சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்துகின்றனர். மேலும் விஸ்வன்குளம் கண்மாயில் சாக்கடை நீர் சேகரமாகிறது. இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கூடுகின்றனர். பராமரிப்பு இல்லாததால் நடைபாதை பல இடங்களில் பெயர்ந்துள்ளன. ரூ.2 கோடியில் பராமரிக்கப்பட்ட இந்த கண்மாய்களை தொடர்ந்து பராமரிக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

